இரண்டே நாளில் 10 மில்லியன் வியூஸ் – தெறிக்க விட்ட “கர்ணன்” ட்ரைலர்!!

0

தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் திரைப்படம் தான் “கர்ணன்” இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெறும் இரண்டே நாட்களில் 10 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. கூடுதலாக, இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

“கர்ணன்” திரைப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் தான் “கர்ணன்” இந்த திரைப்படத்தினை இயக்குனர் மாரி செல்வராஜன் இயக்கி உள்ளார். இவரது முதல் படமான “பரியேறும் பெருமாள்” திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்ததால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது.

விபத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு நிதியுதவி – தேர்தல் ஆணையர் சாகு அறிவிப்பு!!

இதனை அடுத்து இவர் நடிகர் தனுஷை வைத்து 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தினை அடிப்படையாக கொண்ட கதைக்களத்துடன் “கர்ணன்” திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படியான சுழலில் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அந்த ட்ரைலர் தமிழ் சினிமாவில் இது வரை பார்க்காத அமைப்புடன் உள்ளது என்று கூட சொல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது முதல் திரைப்படத்தில் சாதி முறை பற்றி கூறியிருந்த இயக்குனர் இந்த திரைப்படத்திலும் அது தொடர்பான கதைக்களத்தை தான் தேர்வு செய்துள்ளார் என்று ட்ரைலர் மூலமாக தெரிகிறது. எண்ணி இரண்டே வசனங்கள் தான் ட்ரைலரில் உள்ளது ஆனாலும், பெரும் தாக்கத்தினை அந்த இரண்டு நிமிடம் ஏற்படுத்தி விடுகிறது. வெளியிடப்பட்டு 2 நாட்களில் இந்த ட்ரைலர் அமோகமாக 10 மில்லியன் வியூஸ் அடைந்துள்ளது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here