ஏங்க கொஞ்சம் வாழ்த்து சொல்லிட்டு போங்க – இன்று மீம் கிரியேட்டர்ஸ் தினம்!!

0

உலகில் நடக்கும் ஒவ்வொரு சுவாரசியமான விஷயங்கள், அரசியல், சினிமா என அத்தனையும் மக்கள் எளிதாக அறிந்து கொள்வது இந்த மீம்ஸ் மூலமாக தான். அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த வேலையை சிறப்பாக செய்துவரும் மீம் கிரியேட்டர்ஸ் தினம் இன்று.

இன்று மீம் கிரியேட்டர்ஸ் தினம்

70, 80, 90 என ஒவ்வொரு காலங்களிலும் ஏதாவது ஒரு பொதுவான விஷயம் பிரபலமாக இருக்கும். அந்த வகையில் 20களில் ட்ரெண்டிங்காக உள்ள ஒரு விஷயம் என்றால் அது மீம்ஸ். சமுதாயத்தில் நடக்கும் பொதுவான சில செயல்களை மக்கள் எதிர்த்து கேட்க முடியாத சூழலில் அதை எதிர்த்து கேட்கக்கூடிய வடிவமாக இருந்தது சினிமா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் நம்மை சுற்றி நடக்கும் பல நல்ல விஷயங்கள், பிரச்சனைகள், அரசியல், சினிமா என அனைத்து துறைகளையும் எடுத்து வந்து கலாய்த்து தள்ளுவது தான் இன்றைய ட்ரெண்டிங் மீம்ஸ். அதில் சில நல்ல விஷயங்களும் அடங்கும். மக்களுக்கு பயன்படக்கூடிய, மக்களின் சிந்தனையை தூண்டக்கூடிய வகையிலும் சில மீம்ஸ்கள் உருவாக்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட கால சூழ்நிலையை வைத்து மீம்ஸ்கள் உருவாகிறது. அந்த வகையில் தற்போது ட்ரெண்டிக்காக உள்ள மீம்ஸ் என்றால் அது அரசியல் அல்லது தேர்தல் களம். தமிழில் உருவாக்கப்படும் மீம்ஸ்களுக்கெல்லாம் மூலதனம் நகைச்சுவை நடிகர் வடிவேலுவிடமிருந்து துவங்குகிறது.

பாரதி கண்ணம்மா அஞ்சலி இப்படி ஒரு வேலையா பார்த்தாங்க?? இணையத்தில் கசிந்த தகவல்!!

ஒவ்வொரு மீம் கிரியேட்டர்ஸின் ஆயுதமாக இருந்து வருவது நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சினிமா காட்சிகள் தான். சீரியஸான விஷயமாக இருந்தாலும் சரி, காமெடியான விஷயமாக இருந்தாலும் சரி இவையனைத்திற்கும் பயன்படுவது வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் தான்.

இந்த மீம்ஸ் என்கிற விஷயம் 1990களில் இருந்தே இருக்கிறது. ஆனால் இவை பிரபலமானது என்னவோ 20களில் தான். 1976ஆம் ஆண்டு ரிச்சர்ட் டாக்கின்ஸ் என்பவர் தான் முதன் முதலாக மீம் கிரியேட்டர்ஸ் தினம் என்று அறிமுகம் செய்தார். அதன்படி ஒவ்வொரு வருடமும் மார்ச் 26ஆம் தேதி மீம் கிரியேட்டர்ஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொருவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துக்கொண்டிருக்கும் சினிமாவுக்கு பிறகு அந்த வேலையை மிக சிறப்பாக செய்து வருபவர்கள் மீம் கிரியேட்டர்ஸ். அவர்களுக்கான தினம் மார்ச் 26 அதாவது இன்று மீம் கிரியேட்டர்ஸ் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மீம் கிரியேட்டர்ஸ் தினத்தை மையமாக வைத்து பல மீம்ஸ்கள் இணையத்தில் உலா வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here