சிவகார்திகேயனையே கலாய்த்து தள்ளிய ஏ.ஆர்.ரகுமான் – ட்ரெண்டாகும் வீடியோ!!

0

‘சாங்ஸ் 99’ படத்தின் இசை வெளியிட்டு விழா பற்றிய பேச்சு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் அடிக்கும் லூட்டிகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

99 சாங்ஸ் திரைப்படம்

இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது முதன் முறையாக ஒரு ஹிந்தி திரைப்படத்தினை இயக்க இருக்கிறார். அந்த திரைப்படத்தில் நடிகர் இஹான் பாட் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் தயாராகி வருகின்றது. இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடைபெற்றது. இதில் முன்னணி இயக்குனர்களான ஷங்கர், கே.எஸ் ரவிக்குமார், கவுதம் மேனன், விக்னேஷ் சிவன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குட்டி டவுசரில் தொடையழகை காட்டி போஸ் கொடுத்த ஷிவானி – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

அதே போல் முதன் முறையாக இசை அமைப்பாளர்களான அனிருத், ஜிவி பிரகாஷ், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர். அதே போல் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ஏ.ஆர்.ரகுமானுக்கும் தனக்கும் ஏற்பட்ட சுவாரஸ்ய நிகழ்வினை பகிர்ந்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஏஆர் ரகுமான் என்றால் மிகவும் பிடிக்குமாம். அவரை நேரில் பார்க்க வேண்டும் என்றும் விரும்பி உள்ளார்.

சிவா கேட்ட கேள்வி

அவருக்கு அதற்கான வாய்ப்பும் ஒரு முறை விஜய் டிவி மூலமாக கிடைத்துள்ளது. ஏஆர் ரகுமானிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பும் சிவாவிற்கு கிடைத்துள்ளது. சிவா மிகவும் கடுமையாக யோசித்து ஒரு கேள்வியினை தயாரித்துள்ளார். அந்த கேள்வி என்னவென்றால், “ஆஸ்கார் வாங்கிய ஏ.ஆர்.ரகுமானிற்கும், அதற்கு முன்பு இருந்த ஏ.ஆர்.ரகுமானிற்கும் என்ன வித்தியாசம்??” என்று கேட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கு ரகுமான் கூலாக “வயது தான் வித்தியாசம்” என்று கூறியுள்ளார். இந்த பதிலை கேட்டு சிவா ஆச்சிரியம் அடைந்து விட்டாராம். ஒரு மனிதரால் எப்படி இப்படி பெரிய செயலை செய்து விட்டு கூலாக இருக்க முடியும் என்று சிந்தித்தாராம். இந்த சுவாரஸ்ய நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here