தமிழக சட்டமன்ற தேர்தல் – பாஜகவில் இணையும் நடிகர் செந்தில்!!

0
பேத்தியின் திறமையை கண் முன்னே கண்ட நடிகர் செந்தில் - வைரலாகும் கியூட் வீடியோ!!
மெகா ஸ்டார் படத்தில் அறிமுகமாகும் நடிகர் செந்தில் மகன் - போட்டோவுடன் வெளியான வைரல் பதிவு!!

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நகைச்சுவை நடிகர் செந்தில் தற்போது பாஜக கட்சியில் இணைத்துள்ளார்.

செந்தில்:

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் தான் செந்தில். முந்தைய காலங்களில் செந்தில் மற்றும் கவுண்டமணி காம்பினேஷனில் வரும் நகைச்சுவை அனைத்தும் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போதைய காலங்களில் கூட இவர்களில் காம்பினேஷனை யாரும் மிஞ்சவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர்களது நகைவச்சுவை அனைத்தும் யாரு மனதையும் புண்படுத்தாத வகையில் இருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சினிமா துறையில் கலக்கிய செந்தில் அரசியலிலும் தனது கால் தடத்தை பதித்தார். அதன்படி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த காலத்தில் இவர் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராக திகழ்ந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு இவர் அமமுக கட்சியில் சேர்ந்தார். மேலும் இவர் அந்த கட்சியின் அமைப்பு செயலாளராக திகழ்ந்து வந்தார்.

‘நடிகைகள் சம்பளம் அதிகமாக கேட்டால் பிரச்சனையில் தான் முடியும்’ – சமந்தா ஓபன் டாக்!!

பின்பு கட்சி பணிகளில் முறையாக ஈடுபடாத காரணத்தினால் இவர் அந்த பதவியை இழந்தார். தற்போது தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நகைச்சுவை நடிகர் செந்தில் தற்போது பாஜகவில் இணைத்துள்ளார். இவர் இன்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here