Wednesday, April 24, 2024

நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு!!

Must Read

நவம்பர் 17 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் கல்லூரிகளுக்கு வந்தாலும், ஆன்லைன் மூலமாகவும் பாடங்களை கற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

கொரோனா பரவல்:

கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக மத்திய அரசு நாடு முழுவதும் பொது முடக்கத்தை அறிவித்திருந்தது. இதன் காரணமாக அனைத்து கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா பரவலும் தீவிரமாக இருந்து வந்ததால் எந்த மாநில அரசும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிடவில்லை. இப்படியான நிலையில், மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக தான் பாடங்களை கற்று வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்து வந்ததால் மத்திய அரசு கல்லூரிகளை திறக்க அனுமதி அளித்தது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

 

கூடுதலாக அதில் மாநில அரசு தங்களது மாநிலங்களில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு கல்லூரிகளை திறந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. இதனை அடுத்து சில மாநிலங்கள் கல்லூரிகளை திறக்க ஆயத்தமானது.

முதல்வர் உத்தரவு:

அந்த வகையில் தற்போது கர்நாடகா அரசும் கல்லூரிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்த செய்தியினை அம்மாநில முதல்வர் எடியூரப்பா உறுதி செய்துள்ளார்.

9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் – 16,000 பேருக்கு வேலை உறுதி!!

அவர் கூறியிருப்பதாவது, “நவம்பர் 17 ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படலாம். மாணவர்கள் தங்களது விருப்பத்தின் பேரில் கல்லூரிகளுக்கு வந்தாலும், ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகளிலும் கலந்து கொள்ளலாம். கல்லூரிகள் மாணவர்களை கட்டாயப்படுத்தி கல்லூரிகளுக்கு வரவழைக்க கூடாது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ரயில் பயணிகளே., முன்பதிவு செய்யும் அனைவருக்கும் டிக்கெட் உறுதி? மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்தியாவில் ரயில் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பல முக்கிய வழித்தடங்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விரைவிலே தீர்ந்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -