Friday, March 29, 2024

9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் – 16,000 பேருக்கு வேலை உறுதி!!

Must Read

தமிழகத்தில் 7 நிறுவனங்கள் தொழில் தொடங்கி வணிகம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு 9 கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் மூலமாக தமிழகத்தில் உள்ள 16 ஆயிரத்திற்கும் அதிகமான பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடுகளை ஈர்க்கும் திட்டம்:

தமிழகத்தின் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தவும், மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவும், வெளிநாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கவும் அரசு சார்பில் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் ஒரு பகுதியாக இன்று தமிழக தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி 7 வணிக நிறுவங்களின் தொழில் வணிகத்தை துவக்கி வைத்தார்.

facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கூடுதலாக 9 தொழில் நிறுவனங்களின் 10,002 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் மூலமாக 16,545 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடிக்கல் நாட்டப்பட்ட 9 திட்டங்கள் மற்றும் வணிக உற்பத்தி துவக்கப்பட்ட 7 தொழில் நிறுவனங்களின் விவரங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் விவரம்:

தமிழக அரசு வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும், தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் முன்னிலை வகித்து வருகின்றது. வணிக உற்பத்தி துவக்கப்பட்ட நிறுவனங்களின் விவரம்,

  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் நோக்கியா தொலைதொடரபு நிறுவனத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் வேலைவாய்ப்பு. 500 கோடி ரூபாயில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 5,600 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும். பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட நோக்கியா நிறுவனம் தற்போது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இனி செயல்பட உள்ளது.
  • திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் 1800 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 600 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட உள்ளது. மேலும், வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் தொழில் திட்டமும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
  • திண்டுக்கல் மாவட்டத்தின் வத்தலக்குண்டில் 150 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்துடன் 70 கோடி ரூபாய் முதலீட்டில் Dindigul Renerwable Energy Private Limited (Phase – 1) நிறுவனத்தின் மின் உற்பத்தி நிறுவனம் செயல்பட உள்ளது.
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் 12 கோடி ரூபாய் முதலீட்டில் Mudhra Fine நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம் செயல்பட உள்ளது.
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் 22 கோடி ரூபாய் முதலீட்டில் Shell Bearings and Pushings உற்பத்தி திட்டம் செயல்பட உள்ளது.

மேலே குறிப்பிட்ட அனைத்து திட்டங்களும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் விவரம்,

தமிழக முதல்வர் 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அந்த நிறுவனங்களின் விவரம்,

  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 150 கோடி ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதே போல் இன்னும் ஒரு திட்டம் 5512 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட உள்ளது.
  • திண்டுக்கல் மாவட்டத்தில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் 1100 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் தொழில் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் மேலும் 300 கோடி ரூபாயில் 500 பேருக்கு வேலை வழங்கும் திட்டம் ஒன்றும் செயல்பட உள்ளது.
  • திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முறையே 1000 கோடி மற்றும் 250 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் திட்டம் துவங்க உள்ளது.

இந்த அனைத்து திட்டங்கள் மூலமாக தமிழகத்தின் பொருளாதார நிலை மேலும் வளர்ச்சி அடையும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக குடும்ப தலைவிகளே., உரிமைத் தொகை ரூ,1,500ஆக உயரும்? பாஜக அண்ணாமலை வாக்குறுதி!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -