தமிழக சட்டமன்ற தேர்தல் – முதல்வர் பழனிச்சாமியின் தேர்தல் பரப்புரை இன்று துவக்கம்!!

0
eps

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இன்று வேட்புமனு தாக்கல் துவங்கவுள்ள நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று முதல் தேர்தல் பரப்புரையை துவங்க உள்ளார்.

முதல்வர் பிரச்சாரம்

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளின் தொகுதிப்பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் மனுத்தாக்கல் இன்று முதல் துவங்கவுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டுமாக தனது தேர்தல் பரப்புரையை துவங்க உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதலமைச்சர் பழனிச்சாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையை நிகழ்த்தவுள்ளார். இதற்காக சென்னையிலிருந்து மதியம் விமானம் மூலம் 1.45 மணிக்கு புறப்படும் முதல்வர் பழனிச்சாமி கோவைக்கு செல்கிறார். இன்று மாலை 5.30 மணியளவில் ஏற்காடு தொகுதி, வாழப்பாடியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சித்ராவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

தொடர்ந்து கெங்கவல்லி தொகுதி, தம்மம்பட்டியில் அதிமுக வேட்பாளர் ஏ.நல்லதம்பிக்கு ஆதரித்து பேசும் அவர் ஆத்தூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஏ.பி.ஜெயசங்கரனுக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர் சேலத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று தங்கும் பழனிச்சாமி, சனிக்கிழமையும் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here