கோவை ஈஷா யோகா மையம் – கோலாகலமாக நடந்த மகா சிவராத்திரி விழா!!

0

நேற்று மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் அங்கு விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மகா சிவராத்திரி:

நேற்று சிவனை போற்று வகையில் உலகம் முழுவதும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று முழுவதும் சிவன் கோவிலுக்கு மக்கள் படையெடுத்து சென்று சிவனை தரிசித்து வந்தனர். அதேபோல் நேற்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. நேற்று மாலை அங்கு லிங்க பைரவி தேவியின் ஊர்வலத்துடன் மகா சிவராத்திரி விழா துவங்கியது. பின்பு லிங்க பைரவிக்கு மகா ஆரத்தி நடைபெற்றது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதற்கு பிறகு யோகா வேள்வியை சத்குரு ஜாக்கி வாசுதேவ் ஏற்றி வைத்து சிறப்பித்தார். அப்போது பேசிய சத்குரு கூறியதாவது, மகா சிவராத்திரி விழா என்பது சிவனின் அருளை பெறுவதற்கு உகந்த நாள். இதனை அனைவரும் மதம் சார்ந்த விழா என்று கருதாமல் நம்பிக்கை சார்ந்த விழாவாக காண வேண்டும். மேலும் இந்த விழாவில் பாரம்பரியத்தை தோற்றுவிக்கும் வகையில்தெலுங்கு பாடகி மங்களி, குட்லே கானின் கிராமிய இசை பாடல், பார்திவ் கோஹில் மற்றும் கபீர் காஃபே இசைக்குழுவினர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மேலும் ஹிந்துஸ்தானி பாடகி கவுசிகி சக்ரவர்த்தியின் வாய்ப்பாட்டு, சந்தீப் நாராயணனின் இசை மற்றும் ஈஷா சமஸ்கிருதி மாணவர்களின் நடன நிகழ்ச்சி என விழா கோலாகலமாக நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல் நேற்று நள்ளிரவில் அனைவரின் கண்ணை கவரும் வகையில் 112 அடி உயர ஆதியோகி திவ்ய திரிசன காட்சியும் இடம்பெற்றது. இதனை பக்தர்கள் அனைவரும் மிக சிறப்பாக திரிசித்து வந்தனர். மேலும் நேற்று அங்கு கூடிய பகதர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here