“அவள கஷ்டப்படுத்துனவங்க தெருவுல திரிவாங்க” – சித்ராவின் ரீல் அம்மா வேதனை!!

0

சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தை தொடர்ந்து அவரை பற்றி பிரபலங்கள் பலரும் பேசியுள்ள நிலையில் நடிகை சாந்தி வில்லியம்ஸ் சித்ராவை குறித்து பேசியுள்ள கருத்துக்களை இந்த பதில் காண்போம்.

நடிகை சித்ரா மரணத்தை அவரது ரசிகர்களால் எப்படி தாங்க முடியவில்லையோ அதைப்போலவே அவருடன் கூட நடித்த நடிகர்கள் பலரும் அவரது இழப்பை தாங்க முடியாமல் உள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ராவிற்கு அம்மா கதாபாத்திரத்தத்தில் நடித்தவர் நடிகை ஷாந்தி வில்லியம்ஸ்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் தனது சொந்த மகனை தற்போது சமீபத்தில் தான்இழந்துள்ளார். தனது மகன் இறந்த சோகத்தில் இருந்தே அவர் இன்னும் வெளிவராத நிலையில் தற்போது சித்ராவின் மரணம் வேறு அவரை மிகவும் பாதித்து உள்ளது.

மேலும் தனக்கு கண்ணீர் வற்றி போய் விட்டதாகவும், கஷ்டத்தில் மகளாக இருந்து ஆறுதல் அளித்த சித்ராவும் பறிபோய் விட்டதாகவும் கூறினார். நான்கு பிள்ளைகளை பெற்றிருந்தாலும் தனக்கு சித்ரா தான் மகளை போல் பாத்துக் கொண்டார் . அவர் இறந்து அவரை பிணவறையில் பார்க்கும் பொது தனக்கு நெஜு வெடித்து விட்டது என்றும் கூறினார். இவர் இல்லாததினால் என்னால் தூங்க கூட முடியவில்லை என்றும் கூறினார்.

தனக்கு ஒரு முறை உடல்நலம் இல்லாமல் போனபோது வீட்டிற்கே வந்து தன்னை பார்த்துக் கொண்டார். மேலும் எனது வீட்டின் ஜன்னல் அவருக்கு மிகவும் பிடிக்கும் அதனால் எப்போது வந்தாலும் அங்கு இருந்து தன்னிடம் பேசி கொண்டு இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் பிச்சை எடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார். யாரையும் மனதால் கூட சித்ரா கஷ்டப்படுத்தமாட்டாள். எந்த விஷயத்தையும் என்னிடம் எப்போதும் சொல்லி விடுவாள். நான் தற்போது எனது மகனை இழந்த துக்கத்தில் உள்ளதால் என்னிடம் சில நாட்களாக எதையும் சொல்லவில்லை.

போலீஸ் வலையில் ஹேமந்த், தீவிர விசாரணை!!

நான் எனது வீட்டிற்கு அவர் வரும்போதெல்லாம் எனது கையாலேயே சமையல் செய்து அவருக்கு ஊட்டிவிட்டு உள்ளேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் கவலையோடு இருக்கும் போது என்னை ஏதாவது செய்து கலகலப்பாக்கி விடுவாள். அவள் இல்லாமல் என்னால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கவே முடியவில்லை.எங்கு பார்த்தாலும் அவர் முகம் தான் தெரிகிறது என்று நடிகை ஷாந்தி வில்லியம்ஸ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here