அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீதான வழக்கு தள்ளுபடி – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

0

சூரப்பா மீதான ஊழல் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு எதிராக டிராபிக் ராமசாமி அண்ணாபல்கலை கழக துணைவேந்தராக சூரப்பா நீடிக்கக்கூடாது எனும் மனுவினை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

சூரப்பா – டிராபிக் ராமசாமி

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் டிராபிக் ராமசாமி அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா பதவி வகிக்க கூடாது என பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த மனுவில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின் படி, ஒருவர் இரு முறைக்கு மேல் துணைவேந்தராக நியமிக்க முடியாது. ஆனால், சூரப்பா கடந்த 2009 முதல் 2015 வரையிலான ஆறு ஆண்டுகள் பஞ்சாப் மாநிலம் ரோபரில் உள்ள ஐ.ஐ.டி-யில் இயக்குனராக பதவி வகித்தார், மேலும் 2016 -2017ல் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் டீன் பதவியையும் வகித்துள்ளார்.

அவர் பதவிகளின் அடிப்படையில் வைத்து பார்க்கும் போது அவர் இரு முறை பதவி வகித்துள்ளார். அவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்தது, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு விரோதமானது அதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

TRAFFIC RAMASWAMY
TRAFFIC RAMASWAMY

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது ஐஐடி இயக்குனர் மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவன டீன் பதவிகள், துணைவேந்தர் பதவிகளுக்கு இணையானது என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை, மனு தாரர் சார்பிலும் எந்த ஆதாரங்களும் சமர்பிக்கபடவில்லை என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here