சீனாவின் புதிய முயற்சி – குணமானவர்கள் ரத்தத்தின் மூலம் சிகிச்சை.!

0

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் தத்தளித்து வருகிறது. இந்த நோய்க்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சீனா ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதாவது இதுவரை குணமடைந்தவரின் ரத்தத்தின் மூலம் சிகிச்சை அளிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

புதிய முயற்சி

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனாவை குணமாக்கும் மருந்தை கண்டறிய பல ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தில் இருந்து சிகிச்சை மேற்கொள்ளும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க புதிய ஆப் அறிமுகம் – ‘COVID – 19 Quarantine Monitor’

அதாவது குணமடைந்தவரின் உடலில் அந்த வைரஸிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி வளர்ந்திருக்கும். இதனால் அந்த ரத்தகத்தை வைத்து சிகிச்சை செய்தால் குணமடைய உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

குணமடைந்தவரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா அணுக்களை பிரித்தெடுத்து அது சிகிச்சை தேவைப்படுபவரின் உடலில் செலுத்தப்படும். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவரின் உடலில் அவ்வைரஸுக்கு எதிரான எதிர் உயிரிகள் வளர்ந்திருக்கும் என்றும் இவை மற்றவர்களை குணப்படுத்த உதவிகரமாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளன.

வாஷிங்டன் மருத்துவ பல்கலை

தயவு செஞ்சு யாரும் வெளியே போகாதீங்க – கையெடுத்து கும்பிட்ட காவல் துறை.! வைரல் ஆகும் வீடியோ.!

சிகிச்சை அளிக்க அமெரிக்க டாக்டர்களும் அந்நாட்டு மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலை கோரியுள்ளனர். வாஷிங்டன் மருத்துவ பல்கலை., டாக்டர் ஜாப்ரி ஹென்டர்சன் கூறுகையில், இது மிகப்பழங்கால நடைமுறைதான். பல்வேறு தொற்று நோய்களுக்கு சிகிச்சை தர இம்முறை வெகுவாக பயன்தந்துள்ளது. ஆனால், இதே நடைமுறையிலான சிகிச்சை, கொரோனாவை குணப்படுத்த எந்தளவிற்கு உதவும் என்பது பரிசோதனைகளுக்கு பின்பே தெரியும், எனக்கூறினார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here