Saturday, May 18, 2024

அக்டோபர் மாதம் ஒரு மோசமான காலகட்டமாக இருக்கும் – தலைமை செயலாளர் எச்சரிக்கை!!

Must Read

மக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், தமிழக தலைமை செயலாளர் சண்முகம்.

பொது முடக்க தளர்வுகள்:

கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் ஒவ்வொரு மாதமும் சில பல தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் பொது போக்குவரத்தான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த கோவில்கள், வணிக வளாகங்கள், பொது துறை நிறுவனங்கள், மால்கள் என்று அனைத்தும் செயல்பட துவங்கிவிட்டன. அதே போல் 100 சதவீத பணியாளர்களுடன் தொழில்த்துறை அலுவலகங்கள் செயல்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக பின்பற்றப்பட்டு வந்த இ பாஸ் முறையும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

curfew relaxations in tn
curfew relaxations in tn

இதனால் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டதாக எண்ணுகின்றனர். இதனால் கொரோனா குறித்த விழிப்புணர்வு படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. இது மீண்டும் கொரோனா பரவும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கொரோனா பரவல் குறித்து எச்சரிக்கும் வகையாக தமிழக தலைமை செயலாளர் சண்முகன் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மோசமான காலம்:

அவர் அதில் தெரிவித்திருப்பது “பொது முடக்க காலத்தில் தளர்வுகள் கொடுக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் கொரோனா பரவல் குறைந்து விட்டது என்று எண்ணுகின்றனர். ஆனால், அடுத்த மாதத்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும், காரணம் மக்கள் அனைவரும் தற்போது தளர்வுகளை பயன்படுத்தி வெளியில் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.”

எச்சில் துப்பினால் ரூ.500, மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்!!

chief secretary - sanmugam
chief secretary – sanmugam

“இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற மறுக்கின்றனர். மாவட்ட ஆட்சியாளர்கள் தான் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அக்டோபர் மாதம் ஒரு மோசமான காலகட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.” இவ்வாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக 6000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர், அதனால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு.,  வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு!!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -