எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

0

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ. 200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதமாக விதிக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கு ஆளுநர் பல்வாரிலால் புரோகித் அனுமதி அளித்துள்ளார்.

கடுமையான விதிகள்:

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பேருந்து பொதுப்போக்குவரத்து, பயணியர் ரயில் சேவை, 100 சதவீத ஊழியர்களுடன் நிறுவனங்கள் இயக்கம் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உளள்து. முறையாக முகக்கவசம் அணிந்தாலே 99 சதவீதம் கொரோனா தொற்றில் இருந்து காத்துக் கொள்ளலாம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழகத்தில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிகளை கட்டாயமாக மக்கள் பின்பற்ற அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விதிகளை மீறுவோர்க்கு அபராதம் விதிக்கும் வகையில் அரசின் பொது சுகாதார சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. இதற்கு ஆளுநர் பல்வாரிலால் புரோகித் அனுமதி வழங்கி உள்ளார்.

அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் செய்வதற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – உயர்கல்வி அமைச்சர் அன்பழகன்!!

அதன்படி பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய், முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய், அரசின் விதிகளை கடைபிடிக்காத நிறுவனங்கள், கடைகளுக்கு 5000 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. மேலும் கட்டுப்படுத்த பகுதிகளில் உள்ள நபர்கள் விதிகளை மீறினால் ஒருவருக்கு 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here