அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் செய்வதற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – உயர்கல்வி அமைச்சர் அன்பழகன்!!

0
KP-anbalagan
KP-anbalagan

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கழகம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது என்ற வெளியான தகவல் தவறு என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கமளித்துள்ளார்.

ஏஐசிடிஇ எதிர்ப்பா?? 

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறாமலே தேர்ச்சி பெற்றதாக  அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் பொறியியல் , கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இறுதியாண்டு தேர்வுகளை தவிர்த்து அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. தற்போது அரியர் வைத்துள்ள மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்தியிருந்தால் அவர்களும் தேர்ச்சி என அறிவித்தது.  இந்நிலையில் பொறியியல் கல்லூரியின் தலைமையாக கருதப்படும் ஏஐசிடிஇ இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியதாக அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருந்தது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

KP-anbalagan
KP-anbalagan

இந்நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி செய்வதற்கு ஏஐசிடிஇ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கமளித்துள்ளார். இது பற்றி செய்தியாளரிடம் பேசிய அவர் ” அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் செய்வதற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்தது என வெளியான தகவல் முற்றிலும் தவறு. அகில இந்திய தொழில்நுட்ப கழகத்திடம் இருந்து அரியர் மாணவர்களை ஆல் பாஸ் செய்ய எதிர்ப்பு தெரிவித்து எந்த மின்னஞ்சலும் வரவில்லை. அண்ணா பல்கலைக்கழ துணைவேந்தர் சூரப்பா, அவரின் கருத்தை ஏஐசிடிஇ யின் கருத்தாக கூறி வருகிறார்.” இவ்வாறு அவர் கூறினார். மேலும் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here