சுவையான சூப்பரான சீஸ் உருளைக்கிழங்கு – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
potato cheese
potato cheese

உருளைக்கிழங்கு எல்லா குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு. இதில் என்ன வகையான ரெசிபி செய்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். உருளைக்கிழங்கு மூலமாக எளிதான முறையில் பல ஸ்னாக்ஸ் செய்யலாம்.இப்பொழுது நாம் சூப்பரான டிஷ் செய்யலாம் வாங்க!!

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு 3

பெரிய வெங்காயம் 2

பச்சைமிளகாய் 2

மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் 1/2 தேக்கரண்டி

முட்டை 3

சீஸ்

சோளமாவு 1/2 தேக்கரண்டி

மைதா மாவு 1/2 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

கொத்தமல்லி

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில் உருளை கிழங்கை தோலுரித்து துருவி எடுத்து தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்து எடுத்து கொள்ளவும். அதன்பின் உருளைக்கிழங்கை துணியில் போட்டு பிழிந்துக்கொள்ளவும். சுத்தமாக தண்ணீர் போகும் வரை பிழியவும்.

potato cheese
potato cheese

அதன் பின் துருவிய உருளைக்கிழங்கை ஒரு பௌலில் போட்டு அதில் உப்பு சேர்த்து கிளறவும். பிறகு சோளமாவு. மைதா மாவு சேர்த்து பிசையவும். அதன் பின் முட்டை சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும். கலந்து வைத்தவற்றில் பச்சைமிளகாய், சீஸ், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

potato cheese
potato cheese

இதனை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். அதன்பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சிறிய சிறிய தோசை போல பரப்பி திருப்பி போடவும் இப்பொழுது சுவையான சூப்பரான சீஸ் உருளைக்கிழங்கு தயார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here