தக்காளி இல்லாமல் சிக்கன் பிரியாணி., அதுவும் அதே டேஸ்ட்ல., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., சுவை வேற லெவல்ல இருக்கும்!!

0
தக்காளி இல்லாமல் சிக்கன் பிரியாணி., அதுவும் அதே டேஸ்ட்ல., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., சுவை வேற லெவல்ல இருக்கும்!!
தக்காளி இல்லாமல் சிக்கன் பிரியாணி., அதுவும் அதே டேஸ்ட்ல., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., சுவை வேற லெவல்ல இருக்கும்!!

பொதுவாக சண்டே வந்துட்டாலே எல்லோர் வீடுகளிலும் நான்வெஜ் சமைப்பது வழக்கம். அது சிக்கன், மட்டன், மீன் என எதுவாக இருந்தாலும், இந்த ரெசிபிகளை சமைப்பதற்கு நமக்கு தக்காளி அவசியமான ஒன்று. ஆனால் தக்காளியின் விலை தற்போது அதிகரித்து இருக்கிறது. இதனால் தக்காளி போடாமல் சுவையான சிக்கன் பிரியாணி சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தேவையான பொருட்கள்;

 • சிக்கன் – 1/ 2 கிலோ
 • பாஸ்மதி அரிசி – 1/ 2 கிலோ
 • வெங்காயம் – 3
 • பச்சை மிளகாய் – 4
 • கொத்தமல்லி – சிறிதளவு
 • புதினா – சிறிதளவு
 • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
 • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு
 • இஞ்சி பூண்டு விழுது – 3 டீஸ்பூன்
 • தயிர் 100 கிராம்
 • பட்டை – 1
 • கிராம்பு – 2
 • பிரியாணி இலை – 1
 • தண்ணீர் – 4.5 கப்
 • எண்ணெய் – 50 கிராம்
 • நெய் – 5 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்;

நாம் பிரியாணி செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே சிக்கனை மசாலுடன் கலந்து ஊற வைத்து கொள்ளவும்.அதாவது நாம் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை ஒரு பவுலில் போட்டு கொள்ளவும். அதோடு 1 டீஸ்பூன் மிளகாய் தூள். 1/ 4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் கரமசாலா தூள், சிறிதளவு உப்பு, தயிர்(இதில் நாம் தக்காளி சேர்க்க போவதில்லை என்பதால் புளிப்பு சுவைக்காக 100 கிராம் அளவிற்கு தயிர் எடுத்துக் கொள்கிறோம்), 1/2 எலுமிச்சை பழ சாறு, கொத்தமல்லி & புதினா இலைகள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

இதுபோக சமைப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் 3 கப் பாஸ்மதி அரிசியை கழுவி வைத்து கொள்ளவும். இப்போது அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பிறகு அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, போட்டு அதோடு நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.

இந்த படத்தில் 3 விலங்குகள் காலியான கண்ணாடி கிளாஸ் வைத்துள்ளது…, இதை 20 வினாடியில் கண்டுபிடிச்சா நீங்க தான் அது!!

மேலும் இதில் நாம் மசாலாவில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பிறகு அதில் 4 . 5 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பின் அதில் ஊற வைத்த அரிசியை போடவும். பிறகு அதன் மீது சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி புதினா இலை போட்டு மூடியை மூடவும். அதன் பிறகு 2 விசில் வந்தவுடன் அடுப்பை ஆப் செய்து கொள்ளவும். இப்போது நமக்கு தக்காளி இல்லாமல் சுவையான சிக்கன் பிரியாணி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here