‘நான் யாரு, எங்க அப்பா யாருனு தெரியுமா??’ மதுபோதையில் போலீசாரை எட்டி உதைத்த இளம்பெண்!!

0

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் பல மதுபான கடைகளும் பார்களும் திறக்கபட்ட நிலையில், வீக் எண்ட் நாளான சனிக்கிழமை அன்று ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் பகுதிகளில் பல இளைஞர்களும், இளம் பெண்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து போக்குவரத்து போலீஸ், வாகன தணிக்கை குழு இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது போதையில் வாகனம் ஓட்டி வந்த இளைஞர் மற்றும் பெண் ஒருவரை போலீஸார் தடுத்து நிறுத்தியபோது அப்பெண் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியும், போலீசார் மீது தாக்குதல் ஏற்படுத்த முயன்றதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாகன தணிக்கை:

வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரை கெட்ட வார்த்தைகளால் திட்டியும், போலீசார் மீது காலால் எட்டி உதைத்து தாக்குதலில் ஈடுபடுகிறார் ஒரு பெண்… இது அரங்கேறியது நம் தமிழகத்தின் தலைநகர் சென்னையில்…!

சென்னை திருவான்மியூர், பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சாலையில் வோக்ஸ்வேகன் கார் ஒன்று அதிக வேகமாக வந்துள்ளது. அதை தடுத்தி நிறுத்தி போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் இளம்பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் வந்துள்ளனர். இருவரும் செம போதையில் இருந்துள்ளனர். அவர்களிடம் மது அருந்தியதற்கான சோதனையில் ஈடுபட போலீஸார் முயன்றுள்ளனர். அப்போது அதிக மது போதையில் இருந்த அந்த பெண் கேட்ட கேட்ட வார்த்தைகளால் போலீஸாரை திட்டி தீர்த்தார். அப்போது போலீசார் சட்டையில் இருந்த பாடி ஒன்(Body one) கேமரா மற்றும் மொபைலில் வீடியோ பதிவு செய்தனர் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த காட்சிகளை வைத்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர், சம்பந்தப்பட்ட பெண் காமினி தன்னை “நான் யார் என்று தெரியுமா?? என் அப்பா யார் என்று தெரியுமா??” என்று கூச்சலிட்டார். பின் அவர்களின் உறவினருக்கு கால் செய்து அவர்களை அழைத்து செல்லும்படி போலீஸார் கூறினர்.

போக்குவரத்து போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்து அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மற்றும் காலால் நெஞ்சில் எட்டி உதைக்க முன்றதால் காமினி மீது போலீஸார் திருவான்மியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு!!

இதனையடுத்து அடையாறு பகுதியை சேர்ந்த அந்த பெண் சினிமாவில் உதவி இயக்குனர் என்றும், உடன் வந்தவர் பெயர் டோட்லா சேஷூ பிரசாத் என்ற 27வயதான வாலிபர் என்றும் அவர் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here