தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை – வானிலை அறிக்கை!!

0

கேரளா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகக்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

இன்று(மே 3) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் தென் தமிழக மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

04.05.2021 மற்றும் 05.05.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

பிக் பாஸ் சம்யுக்தா செய்த சாகசம் – என்ன ஒரு பல்டி! வாயை பிளந்த ரசிகர்கள்!!

06.05.2021 மற்றும் 07.05.2021 மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடியே லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னையில் நாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு!!

அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸாக இருக்கும். காற்றில் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் மாலை முதல் காலை வரை வெக்கையாக இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குன்னூர் 11, தென்காசி, அலகாரி எஸ்டேட், கோத்தகிரி எஸ்டேட் தலா 7, பர்லியார் 6, பெரியகுளம், நாகப்பட்டினம் தலா 5, கடாலடி, சிவகங்கை தலா 4, கோவிலான்குளம், பெருஞ்சாணி அணை தலா 3, பவானிசாகர், திருவள்ளூர் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here