சென்னையில் நாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு!!

0

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிக பெரும்பான்மையை பெற்று திமுக கூட்டணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் நாளை சென்னையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

திமுக கூட்டம்:

தமிழகத்தில் தற்போது சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்பு திமுக கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அதன்படி சுமார் 8 வது தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 159 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையை பெற்று அசத்தியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தமிழகத்தின் புதிய முதல்வரான ஸ்டாலின் வருகிற மே மாத 7ம் தேதி அன்று முதல்வர் பதவியை ஏற்கவுள்ளார். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வாகிறார்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

மேலும் ஸ்டாலின் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளை மாலை 6 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here