அரியர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சென்னை பல்கலை வெளியீடு!!

1
chennai university
chennai university

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது டிசம்பர் 21 முதல் அரியர் தேர்வுகளை நடத்த சென்னை பல்கலைக்கழகம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரியர் தேர்வுகள்:

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் 21 முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இறுதியாண்டு மாணவர்கள் தவிர அனைவர்க்கும் தேர்வுகள் ரத்து செய்வதாக தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் “யுஜிசி விதிகளுக்கு முரணாக அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என பல்கலைக்கழகங்கள் முடிவு வெளியிட கூடாது. பல்கலைக்கழகங்கள் ஆப்லைன் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும்” என உத்தரவிட்டது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து!!

தற்போது, அரியர் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த சென்னை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, வருகின்ற 21-ம் தேதி முதல் அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here