சென்னையில் தொடரும் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

0

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள சில சாலைகளில் வண்டி ஓட்டுபவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இன்னும் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு சென்னையில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை எப்போதுமே மழைக்காலம் என்றாலே மக்கள் சிரமப்பட்டு வருவார்கள். ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை வெள்ளத்தில் மிதக்கும் என்று சொல்லலாம். மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கூட இந்த அளவிற்கு மழை பெய்யவில்லை.  ஆனால் ஜனவரி மாத பிறந்த பின்பு சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் தொடங்கிய மழை இன்னும் பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த கனமழை காரணமாக சென்னையில் போக்குவரத்துக்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி, ஆதம்பாக்கம், பெரியார்நகர் போன்ற பகுதிகளில் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதித்துள்ளது. மேலும் சில வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சைதாப்பேட்டை பஜார் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கின்றது. இதனால் அங்குள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. வழக்கம் போல தாம்பரத்தில் உள்ள சுரங்கப்பாதை இந்த மழையிலும் மூழ்கியுள்ளது. இதனால் ஜி.எஸ்.டி சாலையிலிருந்து கிழக்கு தாம்பரம் செல்வதற்கு வாகன ஓட்டிகள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர்.

தொடர் மழை:

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நகை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பலான இடங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஜஸ்பே மூலம் கிரெடிட் கார்டு தகவல்கள் திருட்டு – சைபர் கிரைம் எச்சரிக்கை!!

மேலும் நாளை நீலகிரி, கடலூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், சென்னை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 6 மணிநேரத்திற்கு சென்னையில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here