இந்தியாவில் பப்ஜிக்கு போட்டியாக வரும் FAU-G – வெளியாகும் தேதி அறிவிப்பு!!

0

சீன நாட்டின் செயலியான பப்ஜி என்னும் கேம் இந்தியாவில் உள்ள மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் இடையே மிக சிறப்பான வரவேற்பை பெற்றது. தற்போது இந்த கேம் பிலே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பப்ஜியை போலவே இந்தியாவின் தயாரிப்பான FAU-G என்னும் கேம் இந்தியாவில் வெளியாகப்போகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பப்ஜி:

சீன நாட்டின் விளையாட்டு செயலியான பப்ஜி இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த கேமில் 100 பேர் ஒரே நேரத்தில் விளையாடலாம். ஒரு களத்தில் 100 பேர்களை இறக்கி விடுவார்கள் அதில் அவர்கள் அனைவரையும் கொள்பவனே வெற்றியாளன். மேலும் இந்த கேமினால் நிறைய உயிர் பலி நேர்ந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த கேமை நீக்க சொல்லி போராடி வந்தனர். குறிப்பாக இந்த கொரோனா காலங்களில் இளைஞர்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு இந்த கேம் சிறந்த பொழுதுபோக்காக இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியா அரசு சீன நாட்டு செயலி அனைத்தையும் தடை செய்தது. சுமார் 100கும் மேற்பட்ட செயலி தடை செய்த பின்பு பிலே ஸ்டோரில் இருந்து பப்ஜி கேம் நீக்கப்பட்டது. இதனை இந்தியா சீன அரசு மீது நடத்திய டிஜிட்டல் போர் என்று கூறினார்கள். இந்த சம்பவத்தினால் பப்ஜி ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். மேலும் இந்த கேமிற்கான இந்தியா உரிமம் விரைவில் வரும் என்ற தகவல் வெளியாகி கொண்டே இருக்கிறது.

‘2.5கோடி கொரோனா தடுப்பூசி மருந்து சேமிக்க ஏற்பாடு நடந்து வருகிறது’ – ராதாகிருஷ்ணன் பேட்டி!!

தற்போது பப்ஜி கேமினை போலவே இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள கேம் தான் FAU-G. இந்த கேம் பப்ஜி கேமினை போலவே இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கேம் சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையே நடந்த கால்வான் பள்ளத்தாக்கு சம்பவங்களை அடிப்படையை கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். தற்போது இந்த கேம் வரும் குடியரசு தினத்தன்று பிலே ஸ்டோரில் வெளியாகும் என்றும் இந்த கேமினை 2.0 படத்தில் பக்ஷி ராஜனாக நடித்த அக்சய குமார் வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளனர். தற்போது இந்த கேமிற்கான முன்பதிவை பிலே ஸ்டோரில் நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here