வங்கிகள் தங்களின் செலவை குறைத்துக்கொள்ள வேண்டும் – மத்திய அரசு உத்தரவு.!

0
cost and revenue
cost and revenue

கொரோனா தோற்று காரணமாக பொதுத்துறை வங்கிகள் தங்கள் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுமாறு, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய அரசு

தற்போது நாடெங்கிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அரசு நிதி பிரச்சனையில் சிக்கியுள்ளது. நிர்வாகிகள், மேலதிகாரிகளுக்கு புதிய கார்கள் வாங்குவது, விருந்தினர் இல்லத்தை புதிப்பிப்பது போன்றவற்றுக்கு செய்யும் செலவுகளை தவிர்த்து, வருமானத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் இறங்குமாறு, பொதுத்துறை வங்கிகளை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆண்டுத் தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் தேர்ச்சிதான் – புது உத்தரவு..!

ipad-floating-graph
ipad-floating-graph

இது குறித்து, மத்திய அரசின் நிதி சேவைகள் துறை, அனைத்து பொதுத்துறை வங்கி தலைவர்களுக்கும் அனுப்பி உள்ளது. அரசின் இந்த அறிவுறுத்தலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது, பஞ்சாப் நேஷனல் வங்கி செய்த ஒரு காரியம் தான். அண்மையில், பஞ்சாப் நேஷனல் வங்கி, அதன் உயர் நிர்வாகிகளுக்கு விலை உயர்ந்த மூன்று புதிய ‘ஆடி’ கார்களை வாங்கியது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும்

கொரோனா தாக்கத்தால் நாடே பாதிக்கப்பட்டு, தொழில்கள் எல்லாம், நிதி ஆதாரங்கள் இன்றி தவித்துக்கொண்டிருந்த நிலையில், பொதுத்துறை வங்கியான, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆடம்பர கார்களை வாங்கியது விமர்சனத்துக்கு உள்ளானது. நாடே முடக்கப்பட்டிருந்த சமயத்தில், கிட்டத்தட்ட, 1.30 கோடி ரூபாய் செலவில், ஆடம்பர கார்களை வங்கி வாங்கியது, அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்தது. இந்நிலையில்தான், மத்திய அரசு, அனாவசிய ஆடம்பர செலவுகளை குறைக்கும்படி, அனைத்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here