ஆண்டுத் தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் தேர்ச்சிதான் – புது உத்தரவு..!

0
students
students

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக தான் அறிவிக்கப்படுவர் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

தேர்ச்சி குளறுபடி:

தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு 80 சதவீதமும், வருகைப் பதிவேட்டின் படி 20 சதவீதமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Public Exam
Public Exam

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் 50 சதவீத மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் தோல்வி அடைந்து உள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி மதிப்பெண்கள் கொடுப்பது என அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குழப்பத்தில் இருந்தனர். மேலும் பல பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் இல்லாததால் பெரும் குளறுபடி ஏற்பட்டு உள்ளது.

இந்திய அரசு & வங்கிகள் இணையதளத்தை ஹேக் செய்ய சீனா முயற்சி – இந்தியா முறியடிப்பு..!

இந்நிலையில் தேர்வுத்துறை 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் ரேங்க் கார்டு மற்றும் விடைத்தாள்களை கோரி இருந்தது. தற்போது மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் (தோல்வி அடைந்து இருந்தாலும்) அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here