கீர்த்தி சுரேஷின் பென்குயின் – த்ரில்லிங்கான விமர்சனம்…!

0
penguin
penguin

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் புது இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் பென்குயின்.இந்த படம் இப்பொழுது  OTT அமேசான் பிரைமில் இன்று வெளிவந்துள்ளது.

அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் சச்சி மரணம் – சோகத்தில் திரையுலகம்…!

இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் அறிமுகம்

Eashvar Karthic
Eashvar Karthic

பென்குயின் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகையாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார்.இந்த படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.இதற்குமுன் நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் வெளியாகியிருந்த நிலையில், அதே தளத்தில் வெளியாகி இருக்கும் இரண்டாவது திரைப்படம் பென்குயின்.

பென்குயின்

Penguin
Penguin

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

கர்ப்பிணி பெண் ஆன கீர்த்தி சுரேஷ் கணவருடன் கருத்து வேறுபாட்டினால் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.ஒரு நாள் குழந்தை காணாமல் போகிறான் உடனே தனது கணவர் தான் கடத்தி இருக்க வேண்டும் என எண்ணுகிறார்.அடர்ந்த காடுகளில் அலைந்து திரிந்து தனது மகனை தேடுகிறார்.சில வருடங்களுக்கு பின் மகன் கிடைத்து விடுகிறான்.அவனை கடத்தியது யார்?எதற்காக? என்பது தான் படத்தின் கதை.கொடைக்கானலில் அழகில் பென்குயின் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தியின் நடிப்பு பென்குயினின் சுவாரசியம்

கொலை, மர்மம், பயம் என த்ரில்லர் படத்துக்கான அம்சங்களுடன் படம் தொடங்குகிறது.முதல் கணவனை விட்டுப் பிரிந்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதோடு காணாமல் போன மூத்த மகன், அஜய்யை தேடி அலைகிறார். முகமூடி அணிந்த கொலையாளிகள் இடம்பெறும் படங்களில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித் திரிவார்கள். அதுவும் கர்ப்பத்தின் முக்கியமான கட்டத்தில் இருக்கும் ஒரு பெண், அடர்ந்த காடுகளில் அலைந்து திரிந்து தனது மகனை தேடுகிறார்.

penguin keerthy
penguin keerthy

கீர்த்தி சொல்லும் கதைகளுக்கு ஏற்றது போலவே படத்தின் காட்சிகளும் நகர்வது சுவாரஸ்யம். ஆனால், படம் கொஞ்சம் ராட்சசன் சாயல் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. அதோடு, படத்தில் ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல் காட்சிகளை கவனித்திருக்கலாம். அதே நேரத்தில் படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் அதிலும் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை மிரட்டியுள்ளது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவும் இரவின் அசத்தை கடத்துகிறது.ரசிகர்கள் சில இடங்களில் சில ஆறுதல்களை பெறலாம். ரத்த-சிவப்பு ஒளியில், இறந்த மனித பாகங்கள், கூர்மையான ஆயுதங்கள், வெறித்தனமான கொலையாளி, கறைபடிந்த அறையில் ஒரு நீண்ட வரிசையில் நறுக்கப்பட்ட சதை ஹாலிவுட் ஹூடூனிட் வகை படங்களை நேரடியாக ஞாபகப்படுத்துகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here