அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் சச்சி மரணம் – சோகத்தில் திரையுலகம்…!

0
sachi
sachi

அய்யப்பனும் கோஷியும் மலையாள படம் ரசிகர்களிடமும் மக்களிடமும் நல்ல வரவேற்பும் பெரியளவில் ஹிட்டும் ஆனது.இந்த படத்தை தமிழ் மற்றும் பிற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் போட்டிப்போட்டனர்.இந்த படத்தை இயக்கிய இயக்குனர் கே,ஆர். சச்சிதானந்தம் உடல்; நலக்குறைவு ஏற்பாடு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிர்துறந்தார் கே,ஆர். சச்சிதானந்தம்.

விஜய் சேதுபதியின் “கொரோனா குமார்” – இயக்குனர் கோகுலின் வைரல் வீடியோ…!

அய்யப்பனும் கோஷியும்

sachi
sachi

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிரித்விராஜ்,பிஜு மேனன் நடிப்பில் கே,ஆர்.சச்சிதானந்தம் என்னும் சச்சி இயக்கிய படம் அய்யப்பனும் கோஷியும்.இப்படம் மலையாளத்தில் மெஹா ஹிட் ஆனது.இந்த கதை பல இயக்குனர்களை கவர்ந்து ஈர்த்தது இதை பார்த்த பிற மொழி இயக்குனர்கள் இப்படத்தை ரீமேக் செய்ய போட்டிப்போட்டனர்.தமிழிலும் ரீமேக் செய்ய தயார் ஆனார்கள்.இந்த படம் தேசிய அளவில் நல்ல பெயர் பெற்றது.

சச்சி  மரணம்

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

கே,ஆர்.சச்சிதானந்தம் என்னும் சச்சி 48  வயதானவர்.இவர் ஒரு நல்ல கதையாசிரியர்,தயாரிப்பாளர்,இயக்குனர் என பல திறமைகள் உடையவர்.இவர் ரன் பேபி ரன், அனார்கலி, ராமலீலா, டிரைவிங் லைசென்ஸ் போன்ற படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார்.இவருக்கு இடுப்பு எலும்பில் கும் இருந்ததால் கடந்த ஜூன் 15 ஆம் தேதி திரிச்சூர் ஜூப்ளி மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.பின் 16ஆம் தேதி திடீரென இதய துடிப்பு பிரச்சனை வந்ததால் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் மருத்துவர்கள்.பின் மீண்டும் மேற்று மாரடைப்பு வந்து சிகிச்சை பலனின்றி சச்சி மருத்துவமனையில் உயிரிழந்தார்.இவரது மரணம் மலையாள திரையுலகினரை அனைவரையும் பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சச்சி மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here