முகக்கவசம் அணியாத 76 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு – காவல்துறை அதிரடி..!

0
Police
Police

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கை மீறி தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வரும் வாகன ஓட்டிகள் மற்றும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுகிறது.

அபராதம்:

தமிழகத்தில் ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாகி உள்ளது. மேலும் மக்களின் ஒத்துழைப்பின்மையும், அலட்சியமும் கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக அரசு சார்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை. இதனால் காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Police
Police

டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு..!

ஊரடங்கை மீறி தேவைற்ற காரணங்களுக்காக வெளியே வந்த வாகன ஓட்டிகளிடம் 12 கோடி ரூபாய்க்கு மேல் இதுவரை அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே வந்த 76,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் இருந்து ரூ. 3.65 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்து உள்ளது. மாஸ்க் அணியாதவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here