டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு..!

0
TASMAC
TASMAC

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் மருத்துவக்குழு மற்றும் அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை (12 நாட்கள்) முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இ-பாஸ் பெறுவதிலும் பல்வேறு நிபந்தனைகள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு – அவசர சட்டத்திற்கு ஒப்புதல்..!

TASMAC Sales
TASMAC Sales

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் 12 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறந்து மது விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இதில் சென்னையில் ஏற்கனவே டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டு உள்ள காரணத்தால் மற்ற 3 மாவட்டங்களில் கடைகளை 12 நாட்களுக்கு மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here