நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு – அவசர சட்டத்திற்கு ஒப்புதல்..!

0
NEET EXAM
NEET EXAM

மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வர தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நீட் உள் ஒதுக்கீடு:

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர மத்திய அரசு சார்பில் நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆரம்பத்தில் தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் மட்டும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் மத்திய அரசின் உத்தரவு காரணமாக தேர்வுகள் நடைபெற்றது. இதில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம் என்பதால் அவர்களின் மருத்துவ கனவு நிறைவேறுவது கடினமான ஒன்றாக இருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

NEET EXAM
NEET EXAM

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ள இடங்கள் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இந்நிலையில் தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு கொண்டு ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு அவசர சட்டத்தை கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. பொருளாதார நிலை, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் தனியார் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து அரசுப்பள்ளி மாணவர்களால் படிக்க இயலாது என்பதாலும் நீட் தேர்வு மூலம் அதிகளவில் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் நுழையாத காரணத்தாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here