நீலம், பச்சை, ஆரஞ்சு, பிங்க் – எந்த பால் பாக்கெட் வாங்குனா நல்லது..?

0
milk pockets
milk pockets

பால் அன்றாட அனைவரும் பருகும் பல சத்துக்கள் உடையது ஆகும். அனால் பசும்பாலை தொடர்ந்து தற்போது அதனை பாக்கெட்டுகளிலும் விநோயோகம் செய்ய ஆரம்பித்து விட்டனர். ஆனால் அதன் நிறங்களை வைத்து அதன் சத்துக்கள் மாறுபடுகின்றன.

நீல நிற பாக்கெட் பால்

இது சமன்படுத்தபட்ட பால் ஆகும். இவை எளிதில் ஜீரணமாக கூடியவை. எனவே குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நோயாளிகள் அனைவரும் அருந்தலாம். இதற்கு நைஸ் பால் என்று பெயர் உள்ளது.

blue color milk pocket
blue color milk pocket

100கிராம் பாலில் 3 கிராம் அளவு கொழுப்புச்சத்தும், 3.2 கிராம் அளவு புரதமும், 4.7 கிராம் அளவு கார்போஹைட்ரேட்டும், 700 மி.கிராம் அளவு தாது உப்புக்களும், 60 கிலோ கலோரியும் உண்டு.

பச்சை நிற பால் பாக்கெட்

இது நிலைப்படுத்தப்பட்ட பால். இதில் கொழுப்பு சத்துக்கள் சற்று அதிகம். இந்த பாலை இளம்வயதினர்கள் மற்றும் நடுத்தர வயதினர்கள் பருகலாம். அதாவது 40 வயதிற்குட்பட்டவர்கள் பருகலாம்.

green color milk pocket
green color milk pocket

100 கிராம் பாலில் 4.5 கிராம் அளவு கொழுப்புச்சத்தும், 3.2 கிராம் அளவு புரதமும், 4.7 கிராம் அளவு கார்போஹைட்ரேட்டும், 700 மி.கிராம் அளவு தாது உப்புக்களும், 74 கிலோ கலோரியும் உண்டு.

ஆரஞ்சு நிற பால் பாக்கெட்

இது அதிக கொழுப்பு சத்து நிறைந்த பால். இது பெரும்பாலும் இனிப்பு பண்டங்கள் செய்யும் போது மட்டும் பயான்படுத்தலாம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்ப்பதே நலல்து. ஏனெனில் இது அடர்த்தியான பால் ஆகும்.

orange color milk pocket
orange color milk pocket

100 கிராம் பாலில் 6 கிராம் அளவு கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது. 3.4 கிராம் அளவு புரதமும், 4.9 கிராம் அளவு கார்போஹைட்ரேட்டும், 740 மி.கிராம் அளவு தாது உப்புக்களும், 904 கிலோ கலோரியும் உண்டு.

பிங்க் நிற பால் பாக்கெட்

இது அனைவர்க்கும் ஏற்ற வகையான பால். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம் ஏனெனில் இதில் குறைவான கொழுப்பு உள்ளதால் டபுள் டோண்ட் மில்க் என்றும் அழைக்கப்படுகிறது.

pink color milk pocket
pink color milk pocket

100 கிராம் பாலில்1.5 கிராம் அளவே கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது. 3.4 கிராம் அளவு புரதமும், 4.9 கிராம் அளவு கார்போஹைட்ரேட்டும், 740 மி.கிராம் அளவு தாது உப்புக்களும், 484 கிலோ கலோரியும் உண்டு. கொழுப்பு சேரவே வேண்டாம் என்று நினைப்பவர்கள் இதை பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here