எங்கெங்கு முழு ஊரடங்கு..? தமிழக அரசு வெளியிட்ட முழு விபரங்கள்..!

0
Lock down
Lock down

கொரோனா தாக்கம் தமிழ்நாட்டில் குறையாமல் இருக்கிறது அதுவும் சென்னையில் அதன் சுற்றுவட்டாரத்தில் தாக்கம் பாதிப்பும் அதிகரித்துக்கொண்டே போகிறது எனவே மக்கள் நலன் கருதி சென்னையில் ஜூன் 19 முதல் 30 வரை மீண்டும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது எனவே சென்னை  பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜூன் 21 உடன் உலகம் அழியப் போகிறதா..? சர்ச்சையை கிளப்பிய மாயன் காலண்டர்..!

ஜூன் 19 முதல் 30 வரை நீட்டிப்பு

lockdown extended june 30
lockdown extended june 30

கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய,மாநில அரசு போராடிக்கொண்டு இருக்கிறது.நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.பல்வேறு தளர்வுகளுடன் கடந்த இரண்டு மாதங்களாக பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில் தற்போது  பொது முடக்கம் மேலும் வருகிற 30ஆம் தேதி வரை போடப்பட்டுள்ளது.எனினும், கொரோனா வைரஸின் தாக்கம் சென்னையிலும் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து தான் கொண்டிருக்கிறது.ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.சென்னையில் கொரோன உச்சத்தில் இருக்கிறது சென்னையால் தமிழ்நாடே பயத்தில் இருக்கிறது.வருகிற 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் கீழ் பெரு நகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

எங்கெங்கு ஊரடங்கு..?

rs.1000 ration card
rs.1000 ration card

திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் எனவும், மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.முன்னதாக, பொது முடக்கம் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை கருத்தில் கொண்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல், மே, ஜுன் மாதத்திற்கான ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here