இந்தியாவை விட பாகிஸ்தான், சீனாவிலேயே அணு ஆயுதங்கள் அதிகம் – சர்வதேச அமைப்பு தகவல்..!

0
அணு ஆயுதங்கள்
அணு ஆயுதங்கள்

இந்தியாவை விட சீனா பாகிஸ்தானிடம் அதிக அணு அயிதங்கள் உள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம்

இந்த சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் அணு ஆயுதங்களை ஆய்வு செய்து அதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது,” சீனாவில் 350, பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதங்கள் உள்ளன. உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 90 சதவீதம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளன. அவற்றில் அமெரிக்காவிடம் 5,800, ரஷ்யாவிடம் 6,375 அணு ஆயுதங்கள் உள்ளன. 2020ம் ஆண்டு துவக்கத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, உலகளவில் 13,400 அணுஆயுதங்கள் உள்ளன. கடந்த ஆண்டு,1 3,865 அணு ஆயுதங்கள் இருந்தன.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அணு ஆயுதங்கள்
அணு ஆயுதங்கள்

இதனை அடுத்து இந்த ஆண்டு கணக்கின் படி பிரான்சில் 290, பிரிட்டனில் 215, இஸ்ரேலில் 90, வடகொரியாவில் 30 முதல் 40 அணு ஆயுதங்கள் உள்ளன. மேலும் இந்தியா பாக்கிஸ்தான் சீனாவை ஒப்பிடும்போது அவை சிறிய நாடுககள். அனால் அந்த நாடுகள் புதிதாக அணு ஆயுதங்களை தயாரிப்பதிலும் அல்லது தயாரித்த அணு ஆயுதமைப்பை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கைகளிலும் மற்றும் அதற்கான நோக்கமும் தங்களிடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

nuclear weapons
nuclear weapons

சீனா தன்னிடம் உள்ள அணு ஆயுத அமைப்பை நவீனப்படுத்தி வரும் நிலையில், இந்தியா , பாகிஸ்தான் தங்களிடம் உள்ள அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருகின்றன. வட கொரியா , தனது ராணுவ ரீதியிலான அணுஆயுத திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. அணு ஆயுத சோதனை குறித்து இந்தியா , பாகிஸ்தான் நாடுகள் தகவல் தெரிவித்திருந்தாலும், அவற்றின் நிலை அல்லது எண்ணிக்கை குறித்து குறைந்தளவு தகவல்களை மட்டுமே தெரிவித்துள்ளன. அமெரிக்கா, ரஷ்யாவும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி வருகின்றன” இவ்வாறு அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here