பிக் பாஸ் 4 இல் விஜய் பட நடிகை – வெளியான தகவல்!!

0
amritha aiyer
amritha aiyer

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தொடங்கவுள்ளதாக ப்ரோமோக்கள் வெளியாகின. ஆனால் எப்பொழுது தொடங்கும் என்கிற அறிவிப்பு இன்னும் பெயர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் இதில் கலந்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

2017 இல் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் சீசனில் கலந்துகொண்ட அனைவரும் பிரபலமடைந்தனர். குறிப்பாக ஓவியா. இவருக்கு ஓவியா ஆர்மி என்றே தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி புகழ் பெற்றது. அடுத்தடுத்த சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

bigg boss
bigg boss

மேலும் சீசன் 3 மற்ற இரண்டு சீசன்களை விட உச்சத்தை அடைந்தது. ஜூன் மாதத்தில் தொடங்க இருந்த பிக் பாஸ் சீசன் 4 கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. மேலும் தற்போது தொடங்க இருக்கும் சீசன் 4 தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அதன் போட்டியாளர்களின் பெயர்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

amritha aiyer
amritha aiyer

அந்த வகையில் பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் பெயர் சமூக வலைதளங்களில் அடிபட்டுள்ளது. இதற்கு அவர் பதிலும் அளித்துள்ளார். அதாவது தனக்கு பிக் பாஸ் போவதில் விருப்பமில்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார். மேலும் சுனைனாவும் இந்த சீசனில் கலந்துகொள்வதாக கூறினர். ஆனால் அவரோ நான் ரியாலிட்டி ஷோவிற்கு சென்றுவிட்டால் படங்களில் யார் நடிப்பது என்று ட்வீட் போட்டுள்ளார். தொடர்ந்து போட்டியாளர்களின் பெயர் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இதற்கான எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here