வெண்பா, பார்வதி சதித்திட்டத்தால் திணறும் கண்ணம்மா, சந்தியா – பல திருப்பங்களுடன் வெளியான ப்ரோமோ!!

0
brr

பாரதி கண்ணம்மா, ராஜா ராணி மெகா சங்கமம் சீரியலில் குக் வித் கோமாளி நட்சத்திரங்களுடன் சேர்ந்து கண்ணம்மா, சந்தியா இருவரும் சமைக்கின்றனர். இருவரும் இருவேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள பரிசு யாருக்கு என்று பரபரப்பாக வெளியாகியுள்ளது இந்த வார ப்ரோமோ.

மெகா சங்கமம் ப்ரோமோ

பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்களின் மெகா சங்கமம் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. சிறந்த குடும்பங்களுக்காக நடக்கும் போட்டியில் இந்த இரண்டு குடும்பமும் பங்குபெற்று வருகிறது. முதலில் நடந்த போட்டியில் சௌந்தர்யா குடும்பம் வெற்றி பெறுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இரண்டாவது நடந்த என்டர்டைன்மெண்ட் போட்டியிலும் அட்டகாசமாக போட்டியிட்டு சௌந்தர்யா குடும்பம் வெற்றி பெறுகிறது. இதில் சந்தியாவை தோற்கடிக்க பார்வதியும், கண்ணம்மாவை தோற்கடிக்க வெண்பாவும் போட்டி போட்டு வருகின்றனர்.

கொரோனா பரவல் மத்தியில் ஹோலி கொண்டாட்டம் – சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூடிய மக்கள்!!

அதில் பார்வதியின் சதிவலையில் மாட்டிக்கொண்ட சந்தியா பொது அறிவு போட்டிக்கான கொஸ்டின் பேப்பரோடு கையும் களவுமாக மாட்டுகிறார். பிறகு லட்சுமியின் சாதுரியத்தால் பாரதியின் உதவியுடன் காப்பாற்றப்படுகிறார் சந்தியா. அந்த வகையில் இந்த வார எபிசோடில் போட்டியாளர்களுக்கு சமையல் போட்டி நடக்கிறது.

அதில் குலுக்கல் முறையில் சந்தியா மற்றும் கண்ணம்மா பெயர் வருகிறது. சந்தியாவுக்கு ஸ்வீட் செய்ய சொல்லி கூறும் போது பார்வதியின் வேலையால், மைதா மாவுக்கு பதிலாக அரிசி மாவை பிசைந்து ஸ்வீட் செய்து சொதப்பி விடுகிறார் சந்தியா.

பிறகு வெண்பாவின் சதியால் கண்ணம்மா செய்யும் பிரியாணியில் கரப்பான் பூச்சி விழுந்து விடுகிறது.  கண்ணம்மாவின் சமையலில் கரப்பான் பூச்சி விழுந்து விடுவதை ஒப்புக்கொள்கிறார் கண்ணம்மா. இப்படி இருக்க போட்டியில் யார் ஜெயிக்கபோகிறார்கள் என விறுவிறுப்பாக வெளியாகியுள்ளது மெகா சங்கமம் ப்ரோமோ.

இந்த போட்டிக்கு நடுவராக பிக்பாஸ் போட்டியாளர் சுரேஷ் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டியை சிறப்பிக்கும் வகையில் குக் வித் கோமாளியின் கோமாளிகள் பாலா, ஷிவாங்கி மற்றும் சரத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here