கொரோனா பரவல் மத்தியில் ஹோலி கொண்டாட்டம் – சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூடிய மக்கள்!!

0
holi

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் மிக சிறப்பாக ஹோலி பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஹோலி:

குளிர் காலத்தின் இறுதியில் கடைசி முழு நிலவு நாள் அன்று கொண்டாடப்படும் பண்டிகை தான் ஹோலி பண்டிகை. தற்போது அந்த வகையில் ஹோலி பண்டிகை இந்த ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிவுக்கு வருகிறது. ஹோலி பண்டிகையை இந்தியா, வங்கதேசம் , நேபால், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலியின் முக்கிய நாளில் மக்கள் பிறர் மீது கலர் பொடி தூவியும் கலர் தண்ணீர் உத்தியும் கொண்டாடி வருவார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் முதல் நாளில் நெருப்பை மூட்டுவர். அதற்கு ஹோலிகா தகனம் என்று பெயர். காரணம், இரண்யகசிபுவின் சகோதிரியான அரக்கி ஹோலிகா இளம் பிரகல்லாதனை நெருப்பில் போடப்பட்டான். கடவுள் விஷ்ணுவின் மீது அபரீத பக்தி கொண்ட காரணத்தினால் பிரகல்லாதன் அதில் இருந்து சிறிது காயமும் இன்றி உயிர்பிழைத்தான். இதனை நினைவு கூறும் வகையில் நெருப்புகள் மூட்டப்படுகிறது.

holi

எல்லை மீறிய கவர்ச்சியில் போட்டோஷூட் செய்த மாஸ்டர் பட நாயகி – வைரலாகும் புகைப்படம்!!

தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் மிக தீவிரமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு சுமார் 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா அச்சமின்றி ஹோலி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனால் மீண்டும் கொரோனா வேகமெடுக்க அதிக வாய்ப்புள்ளது போல் தெரிகிறது. பண்டிகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here