கை, கால் மற்றும் கழுத்தில் வெயிலினால் ஏற்பட்ட கருமை மாற – சூப்பரான டிப்ஸ்!!

0

நமது கை, கால்களை அழகாக வீட்டிலேயே பராமரிப்பது எப்படி? கை, கால்கள் பார்ப்பதற்கு கருப்பாக இருக்கிறதே என்று கவலையா? இதற்கு காரணம் நாம் சரியாக பராமரிக்காமல் இருப்பதுதான். முகத்திற்கு மட்டும் பல வகையான கிரீம்களை வாங்கி பயன்படுத்திடுகிறோம். ஆனால், கை, கால்களை கவனிப்பதே இல்லை.

வெயிலினால் ஏற்பட்ட கருமையை மாற:

நாம் வெளியே செல்லும்போது கைகளுக்கு கண்டிப்பாக உறை அணிய வேண்டும். ஏனென்றால், பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டுவதால் வெயிலினால் கைகள் கருத்து நிறம் மாறுகிறது. உறை அணிவதன் மூலம் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்க முடியும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வெளியே செல்லும்போது கைகளுக்கு கிரீம் அல்லது லோஷன் எதாவது பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான், வெளியேயுள்ள தூசு, கிருமிகள் அண்டாமல் இருக்கும். வீட்டிற்கு வந்தவுடன் கை மற்றும் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

காபி பவுடர், எலுமிச்சை, தயிர், தேன் மற்றும் கடலைமாவு சேர்த்து நன்றாக கலக்கி கை கால்களை சுத்தமாக கழுவிவிட்டு இந்த கலவையை அரைமணிநேரம் போட வேண்டும். அரைமணிநேரம் கழித்து கழுவினால் பளிச்சென்று மெடிக்யூர் செய்தது போன்று இருக்கும்.

வெயிலினால் ஏற்படும் கருமையை போக்க கேரட்டை தோலை நீக்கிவிட்டு வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தபின் கைகளால் மசித்து வெயில் பட்ட இடத்தில் தேய்த்து அரைமணிநேரம் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு, செய்வதன் மூலம் கருமை மறையும்.

பச்சரிசி மாவு, கஸ்தூரி மஞ்சள், பால் அல்லது தயிர் சேர்த்து தினமும் தேய்த்து குளிப்பதன் மூலம் கருமை நிறம் மாறி பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.

கை மற்றும் கால்களில் உள்ள முடியை நீக்குவதற்கு வாக்ஸிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கோதுமை மாவை, தேங்காய் எண்ணையுடன் கலந்து கை, கால்களுக்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்யும் பொழுது மாவுடன் சேர்ந்து முடிகள் வந்துவிடும்.

கை, கால்களில் உள்ள வறட்சி தன்மை நீங்க வெண்ணெய், ரோஸ் வாட்டர், ஆலிவ் ஆயில், பாலாடை போன்றவற்றில் எதையாவது குளிக்க போவதற்கு முன் தேக்க வேண்டும். கைகள் மென்மையாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும்.

பாசிப்பயறு மாவு மற்றும் சர்க்கரையை பாலில் கலந்து நன்றாக தேய்க்கும் போது கைகள், வெள்ளையாக மாறும். பச்சைபயறு மற்றும் பால் சேர்க்கும் போது நம் சருமத்தில் உள்ள தேவையில்லாத மாசுகள் நீங்கி புது பொலிவு அடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here