கடைசி நிமிடத்தில் கண்ணம்மாவை ஜெயிக்கவிடாமல் தடுக்கும் வெண்பா – சௌந்தர்யா எடுக்கும் அதிரடி முடிவு!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கோலப்போட்டியில் கண்ணம்மா ஜெயிப்பாரா?? வெண்பாவால் எதாவது விபரீதம் நேருமா?? என்பதே இன்றைய எபிசோடில் ட்விஸ்ட்டாக உள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது சௌந்தர்யா கோலப்போட்டியில் நடுவராக இருக்க கண்ணம்மாவையும் சௌந்தர்யா பார்க்க விட கூடாது என்று என்னென்னவோ வேலை பார்க்கிறார் வெண்பா. சௌந்தர்யாவை பார்த்ததும் கண்ணம்மா வெளியே போக முயற்சிக்கிறார். சுமதி எப்படியோ தடுத்து நிறுத்த அடுத்ததாக கோலப்போட்டியில் பரிசு பொருளை அறிவிக்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கண்ணம்மாவின் பெயர் வரவேண்டும் என்று சௌந்தர்யா வேண்டிக்கொள்கிறார். மூன்றாவது மற்றும் இரண்டாவது பரிசு பொருளை அறிவிக்க கண்ணம்மாவிற்கு படபடப்பாகிறது. அடுத்ததாக முதல் பரிசு கண்ணம்மாவிற்கு அறிவிக்கப்படுகிறது. கண்ணம்மா பரிசு வாங்க மேடைக்கு செல்ல அப்பொழுது வெண்பா சௌந்தர்யாவும் கண்ணம்மாவும் மாமியார் மருமகள் என்று விழா கமிட்டியிடம் உண்மையை சொல்கிறார்.

கண்ணம்மாவிற்கு பரிசு தர கூடாது என்று அனைவரும் சொல்கின்றனர். இல்லையென்றால் இவர் உங்கள் மருமகளே கிடையாது என்று சொல்லிவிட்டு இந்த பரிசை கொடுங்கள் என்றும் சொல்கின்றனர். அதற்கு சௌந்தர்யா இந்த விழாவில் இருந்து தான் விலகிக்கொள்வதாகவும், மற்ற இருவர் போட்ட மார்கில் இருந்து செலக்ட் செய்துகொள்ளுமாறும் கூறுகிறார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு – மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை!!

மற்ற இருவர் போட்ட பாயிண்ட்டிலும் கண்ணம்மா தான் முதல் பரிசு. கண்ணம்மா அந்த 1 லட்சம் பரிசுத்தொகையை பெற்றுக்கொண்டு சென்றார். அடுத்ததாக கண்ணம்மாவை சௌந்தர்யா தேட அவர் அங்கு இல்லை. கண்ணம்மாவே சௌந்தர்யாவை தேடி வருகிறார். அந்த ஒரு லட்சம் பரிசுத்தொகையை சௌந்தர்யாவிடம் கொடுத்து பாரதி தான் தன் உயிரை காப்பற்றியதாகவும், இந்த ஒரு லட்சத்தை பாரதியிடம் கொடுக்கும்படியும் சொல்லிவிட்டு செல்கிறார்.

இதனை எல்லாவற்றையும் பார்த்த சுமதி கண்ணம்மாவிடம் இவர் யார் என்று கேட்க இத்தனை வருடம் தான் பட்ட கஷ்டத்தை சொல்கிறார். சுமதி கண்கலங்கி தானும் இந்த வேதனையை தான் பட்டுக்கொண்டுள்ளேன். உனக்கு இருக்கும் தைரியம் எனக்கு இல்லை என்று நினைத்து கதறி அழுகிறார்.இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here