சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்த பிக் பாஸ் சனம் செட்டி – வைரலாகும் புகைப்படம்!!

0

பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை சனம் ஷெட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பாக திரைப்படங்களில் நடித்து வரும் சனம் ஷெட்டி, தற்போது நடித்துள்ள ஒரு சர்ச்சைக்குரிய காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை சனம் ஷெட்டி

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4ன் நட்சத்திர போட்டியாளர், பிரபல மாடலும், நடிகையுமான சனம் ஷெட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்னதாக, பல்வேறு சர்ச்சைக்குரிய காரியங்களில் இவரது பெயர் அடிக்கடி அடிபடுவது வழக்கம். முன்னதாக நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் 3ன் போட்டியாளரும், சக மாடலுமான தர்ஷன் என்பவரை காதலித்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர்கள் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் கூட நடந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய தர்ஷன், சனம் ஷெட்டியுடனான தன்னுடைய காதலை முறித்து கொண்டார். சனம் ஷெட்டியின் நடவடிக்கை சரி இல்லை என்ற காரணமும் தர்ஷன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

ஆட்டோவிற்கான எல்பிஜி எரிவாயு விலை அதிரடி உயர்வு – ஓட்டுனர்கள் கவலை!!

இதைத்தொடர்ந்து தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறி, காவல் அலுவலகத்தில் தர்ஷன் மீது புகார் அளித்தார் சனம். இந்த பிரச்சனைக்கு பின்பு தான் சனம் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த சனம் ஷெட்டி, சில நாள் சென்ற பின்பாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

அதுவரை இவர் மேல் இருந்த எதிர்மறையான கருத்துக்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சனம் ஷெட்டி. தற்போது இவர் சின்னத்திரை நடிகர் ராகவுடன் இணைந்து நடித்துள்ள காட்சி ஒன்று சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. நடிகர் ராகவுடன் சனம் ஷெட்டி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here