ஆட்டோவிற்கான எல்பிஜி எரிவாயு விலை அதிரடி உயர்வு – ஓட்டுனர்கள் கவலை!!

0

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு பயன்படுத்தும் எல்பிஜி எரிவாயு விலையும் அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதிகபட்சமாக சிதம்பரம் மாவட்டத்தில் 53.85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கேஸ் விலை ஏற்றம்

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கேஸ் விலை உயர்வினை சந்தித்து வருகின்றது. சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இது ஒரு பக்கம் இருக்க மக்கள் அதிகமாக போக்குவரத்துக்கு என்று அதிகம் பயணிப்பது ஆட்டோக்களில் தான். அதில் இருந்து சுற்றுசூழலுக்கு மாசுகளை ஏற்படுத்தும் புகை வெளியே வரும் காரணத்தால் எல்பிஜி என்பதும் எரிவாயுவினை பயன்படுத்த வேண்டும் என்று அரசு சார்பில் உத்தரவிடப்பட்டது.

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு மரணதண்டனை – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

இதனை அடுத்து அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் இதனையே பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்த எரிவாயுவின் விலையும் பயன்பாடு மற்றும் தேவையின் அடிப்படையில் தொடர்ந்து மாறுபடும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினை அடுத்து இந்த எரிவாயுவின் விலையும் தொடர்ந்து 3 மாதங்களாக உயர்ந்து வந்தது. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Hike in auto LPG prices worries drivers - The Hindu

கடந்த 3 மாதங்களில் மட்டும் 7 ரூபாய் அளவில் விலை உயர்ந்து உள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த எரிவாயு ஒரு கிலோ 44.55 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது 52.46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த விலை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த விலை நிலவரத்தால் ஓட்டுனர்கள் மிகுந்த கவலை அடைத்துள்ளனர். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here