கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு மரணதண்டனை – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

0

பஞ்சாப் மாநிலத்தில் விஷ கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அதற்காக மாநில கலால் சட்டத்தில் உரிய திருத்தங்களை பஞ்சாப் அரசு செயல்படுத்தி வருகிறது.

மரண தண்டனை

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ், தரன், படாலா மற்றும் குர்தாஸ்பூர் ஆகிய மாவட்டங்களில் விஷ சாராயம் பருகியதால் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் விஷ சாராயம் குடித்த 11 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டுமாக நடக்காமல் இருக்க பஞ்சாப் அரசு அதிரடியான முடிவெடுத்துள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனையை அதிகரிக்க பஞ்சாப் அரசு முடிவெடுத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி விஷ சாராயம் காய்ச்சும் வழக்கில் கைதாகும் குற்றவாளிகளுக்கு, அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்குவதற்கு, கலால் சட்டத்தை திருத்தியமைக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் கைதாகும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அறிவிப்புகள் வந்துள்ளது. மேலும் அபராதமாக 20 லட்சம் வரை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here