தேர்தலில் தொகுதி பங்கீடுகளை இறுதி செய்ய தீவிரம் – முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை!!

0

தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிகளை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தொகுதிப்பங்கீடுகளை விரைந்து முடிவு செய்ய முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தொகுதி பங்கீடு

அடுத்த மாதம் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சில கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு செய்வதில் அதிமுக கட்சியில் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து அதிமுக கட்சியில் கூட்டணியாக இருக்கும் பாஜக 60 தொகுதிகளை கட்சிக்காக ஒதுக்க அதிமுகவை நிர்பந்தித்து வருகிறது. மேலும் தொகுதிப்பங்கீடு குறித்து தேமுதிகவுடன் அதிமுக கட்சி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்களின் ஆலோசனைக்கூட்டம், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு மரணதண்டனை – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

அந்த ஆலோசனையில், கூட்டணி கட்சிகளுக்கான இட ஒதுக்கீடுகளை இறுதி செய்வது, சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வது, வேட்பாளர் தேர்வு ஆகியவை குறித்து பேசப்பட்டது. இந்நிலையில் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் சேதுராமன் தமிழக முதல்வரை சந்தித்து பேசியுள்ளார். மூவேந்தர் முன்னேற்றக்கழகம் அதிமுகவுடன் இணைந்து சட்டசபை தேர்தலில் மூன்று இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here