தடாலடியாக குறைந்த தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் மக்கள்!!

0

தமிழகத்தில் தங்க விலை அதிரடியாக சரிந்துள்ளது. இதனால் பெரு மகிழ்ச்சி அடைத்துள்ளனர். கூடுதலாக, சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று நினைத்தவர்கள் நகை கடைகளுக்கு படை எடுத்துள்ளனர்.

தங்க விலை 

கடந்த ஆண்டு தங்க விலை பொது முடக்கம் காரணமாக அதிகபட்சமாக உயர்ந்து வந்தது. இதனால் மக்கள் மிகுந்த கவலை அடைந்திருந்தார். பல முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்த காரணத்தால் இந்த அதிரடி விலை உயர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் யாரும் தங்கத்தில் முதலீடு செய்ய மிகவும் சிரமம் அடைந்தனர். ஆனால், இந்த ஆண்டு முதலே தங்க விலை சரிவினை தொடர்ந்து சந்தித்து வந்தது. இதன் காரணமாக மக்கள் சற்று நிம்மதி அடைந்திருந்தனர்.

ஆட்டோவிற்கான எல்பிஜி எரிவாயு விலை அதிரடி உயர்வு – ஓட்டுனர்கள் கவலை!!

இப்படியான சூழலில் இன்று தங்க விலை அதிகபட்சமாக சவரனுக்கு 600 ரூபாய் குறைந்துள்ளது. கிராம் கணக்கிலும் தங்க விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் நகை வாங்க வேண்டும் என்று நினைத்தவர்கள் நகை கடைகளுக்கு படை எடுத்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று தமிழகத்தில் தங்க விலை சவரனுக்கு 608 குறைந்து 34,128 என்று விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல் தங்க விலை ஒரு கிராமிற்கு 76 குறைந்து 4,266 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க வெள்ளி விலை ஒரு கிராம் 1.60 குறைந்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here