பல மாதங்கள் சம்பள பாக்கி – ஐபோன் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!!

0

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள நரசாபூர் தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள ஒரு தைவானிய நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று அலுவலகத்தை அடித்து நொறுக்கி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பளம் தராததால் தாக்குதல்:

விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்யும். இந்த ஆலையில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கடந்த பல மாதங்களாக ஊதியம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து பல மாதங்களாக சம்பளம் வழங்காததால் ஊழியர்கள் ஆத்திரமடைந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சுழலில் நேற்று இரவு ஷிப்டிற்கு வந்த ஊழியர்கள் பணியை முடித்தவுடன், தொழிற்சாலையை கண்டபடி அடித்து நொறுக்கியுள்ளனர். நிறுவனத்தில் இருந்த உபகரணங்கள், உற்பத்தி இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை கட்டைகளைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் ஆலையில் இருந்த கண்ணாடி கதவுகள் உள்ளிட்டவை சுக்கு நூறாக உடைந்து சிதறின. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒன்றாக சேர்ந்து நிறுவனத்தை அடித்து நொறுக்கியதில் அந்த இடமே போர்க்களம் போன்று காட்சியளித்தது. இது குறித்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

கொரோனா பணியில் ஈடுபட்ட பிரபல நடிகைக்கு பக்கவாதம்!!

இதையடுத்து தகவலறிந்து அங்கு உள்ளூர் காவல்துறையினர் சென்றபோது, கூட்டத்தில் ஒருவர் போலீஸ் ஜீப் மீது கல்லை எறிந்தார். அதன் பிறகு காவல்துறையினர் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டினர்.பின்னர் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் சிலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.சம்பளம் வழங்க மறுத்ததால், ஊழியர்கள் நிறுவனத்தை அடித்து உடைத்ததோடு, தீ வைத்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here