காரசாரமான “மட்டன் ப்ரை” ரெசிபி – செஞ்சு அசத்தலாம் வாங்க!!

0

என்னதான் வெளிநாட்டு உணவு வகைகளை சாப்பிட்டாலும் நம்ம பாரம்பரியமான முறைல சமைச்சு சாப்பிடுறது தாங்க சிறந்தது. நம்ம தாத்தா, பாட்டி , அம்மா, அப்பா இவங்களோட உடல் வலிமையை பாக்கும் போது நம்மளோட உடல்வலிமைலாம் ஒண்ணுமே இல்லங்க. காரணம் அவுங்க அந்த காலத்துல எந்த உணவா இருந்தாலும் அதை வீட்ல சமைச்சு தான் சாப்பிட்டாங்க.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இப்போதைய தலைமுறையான நம்ம உணவு விஷயத்துல ரொம்ப கவனக் குறைவா இருக்கோம். இதனோட விளைவு தான் உடல் பலகீனம். இந்த “மட்டன் ப்ரை” செஞ்சு சாப்பிட்டீங்கன்னா உடம்புக்கு ரொம்ப நல்லது. மட்டன் ல உடலுக்கு தேவையான பலசத்துக்கள் இருக்கு. காரசாரமான ” மாட்டோம் ப்ரை” எப்படி சமைக்கலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

மட்டன் – 500gm
மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்
இஞ்சி,பூண்டு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
கரம்மசாலா – 1 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் மட்டனை மஞ்சள்தூள் சேர்த்து கழுவிக்கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் மட்டன், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சிறிது தண்ணீர் முதலியவற்றை சேர்த்து 6 விசில் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பௌலில் வேக வைத்த கறி, உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

சீரியல் நடிகை சித்ரா தற்கொலை – கணவர், சக நடிகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை!!

இப்பொழுது ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு பிரட்டி வைத்திருக்கும் கறியை சேர்த்து வறுக்க வேண்டும். மட்டன் துண்டுகள் மொறு மொறுப்பானதும் இறக்கி விடவும். இப்பொழுது நம்ம காரசாரமான “மட்டன் ப்ரை ” தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here