முதல்வரை அவதூறாக பேசிய விவகாரம் – ஆ ராசா மீது வழக்குப்பதிவு!!

0

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது அதிமுக சார்பிபில் முதல்வரை அவதூறாக பேசியதன் காரணமாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

ஆ.ராசா மீது வழக்குப்பதிவு:

ஆ. ராசா எனும் ஆண்டிமுத்து ராஜா, திமுகவை சேர்ந்தவர். 15 ஆவது மக்களவை அமைச்சரவையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக 2010ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். இந்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சராக இருந்த ராசாவை மீது இந்திய புலனாய்வுத் துறை மூலம் குற்றம் சாட்டப்பட்டு 60 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரும் திமுகவின் பல முக்கிய உறுப்பினர்களும் இந்த முறைக்கேட்டில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் எனவும் நடுவண் புலனாய்வுச் செயலகம் மற்றும் வருமான வரித்துறை இணைந்த நடத்திய விசாரணையில் அலைக்கற்றை ஒப்பந்தத்திற்கான கடைசித் தேதியை முன்னதாக மாற்றியதற்கு லஞ்சம் பெற்றிருக்கலாம் என புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கானது உச்சநீதி மன்ற மேற்பார்வையில் டெல்லியில் உள்ள நடுவண் புலனாய்வு செயலகத்தின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வந்தார். இந்த வழக்கின் தீர்ப்பானது 2017ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதால் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் டிசம்பர் 1ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “2ஜி ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்த திமுக கட்சி தலைவர் மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன் போல் பேசி வருகிறார், அவர் விரைவில் 2ஜி வழக்கில் சிக்குவார்” என விமர்சித்துப் பேசினார்.

பண்டிகை கால சிறப்பு ரயில்கள்!!

முதல்வரின் விமர்சனத்துக்கு பதில் அளித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, “2ஜி குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். கோட்டையில் வைத்து நேருக்கு நேர் விவாதிக்க முதலமைச்சர் தயாரா? அட்டார்னி ஜெனரல் உட்பட யாரை வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளட்டும். நான் தயாராக இருக்கிறேன்” என சவால் விடுத்தார்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை அவதூறாக பேசினார்.

ஆ.ராசா சவால் விட்டதன் விளைவாக அதிமுக, திமுக என இரு தரப்பும் மாறி மாறி விமர்சித்துப் பேசினர். கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி இருவரும் அவர்களது கோபத்தை பேச்சில் காட்டினர். ஆ.ராசா கை வெட்டப்படும் என கடம்பூர் ராஜு பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை அவதூறாக பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆ. ராசா மீது வழக்கு தொடரப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன், செல்வக்குமார் புகாரின் பேரில் ஆ.ராசா மீது இரண்டு பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here