இனி முதுகு வலிக்கு சொல்லுங்க குட் பாய் – அருமையான டிப்ஸ் இதோ!!

0
back pain

முதலில் வயதானவர்களுக்கு மட்டுமே இருந்து வந்த முதுகுவலி தற்போது சிறியவர்களுக்கும் வர ஆரம்பித்துள்ளது. இதற்கு காரணம் மாறிவரும் பழக்க வழக்கங்கள் தான். இப்பொழுது இந்த முதுகுவலியை தவிர்க்க எளிமையான முறைகளை இங்கே காண்போம்.

முதுகுவலி:

முதுகுவலிக்கு முக்கிய காரணமே நம் சக்தியை மீறி வேலைகளை தொடர்ந்து செய்வது தான். அதிகப்படியான கனத்தை தூக்குவது, அதிக நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பது. மேலும் கால் மேல் கால் போட்டு உட்காருவது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

back pain
back pain

படுத்தே இருப்பது போன்றவற்றால் முதுகு வலி ஏற்படுகிறது. வாயு அதிகம் உள்ள உள்ள பொருட்கள் மற்றும் காரமான பொருட்களை சாப்பிட்டாலும் முதுகு வலி ஏற்படும். மேலும் இயற்கை உபாதைகளை அதிக நேரம் அடக்கி வைப்பதாலும் முதுகுவலி ஏற்படுகிறது.

முதுகுவலி நீங்க வழிமுறைகள்:

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் 1 தேக்கரண்டி மிளகு, 5 கிராம்பு, சிறிது சுக்கு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை தினமும் குடிக்க வேண்டும். இதனால் முதுகு வலி குணமடையும்.
back pain
back pain
  • வெற்றிலையை சாறு பிழிந்து எடுத்துக் கொளுங்கள். அந்த சாற்றில் தேங்காய் எண்ணெயை கலந்து அதனை சூடுபடுத்தவும். பிறகு அதனை மிதமான சூட்டில் முதுகில் நன்கு தேய்க்க வேண்டும். இவ்வாறு தேய்த்து வந்தால் முதுகு வலி குணமடையும்.

பப்ஜி விளையாட்டால் மலர்ந்த காதல் – மாணவி வீட்டை விட்டு ஓட்டம்!!

  • வாத நாராயணி இலையை விளக்கெண்ணெயில் முக்கி முதுகு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் வைத்து வர வேண்டும். இவ்வாறு செய்தாலும் முதுகு வலி குணமடையும்.
back pain
back pain
  • உங்கள் உணவில் அடிக்கடி கொள்ளுரசம் சேர்த்துக் கொண்டால் முதுகு வலி குணமடையும். மேலும் இரவில் தூங்கும்போது பாலில் மஞ்சள்தூள், ஏலக்காய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்தால் முதுகு வலி குணமடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here