சந்தோஷத்தில் மூழ்கிய இல்லத்தரசிகள் – 4 நாளில் 1624 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை!!

0
Gold
Gold

கடந்த மாதம் வரலாறு காணாத அளவு உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1624 ரூபாய் குறைந்து உள்ளது இல்லத்தரசிகளை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இன்றைய விலை:

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்ட பொருளாதார சரிவால் பங்குச்சந்தைகள், ரியல் எஸ்டேட் மதிப்பு குறைந்த காரணத்தால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவு முதலீடு செய்தனர். இதனால் அதன் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வந்தது. கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு சவரன் ரூ.43,328 யை எட்டியது பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விலை குறைந்து கொண்டே வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

திங்கட்கிழமை சவரன் 39,320க்கு விற்கப்பட்ட தங்கம், செவ்வாய் அன்று 38,800 ஆக குறைந்தது. பின்னர் மீண்டும் புதன்கிழமை சவரன் 320 ரூபாய் குறைந்து ரூ.38,480க்கு விற்பனை ஆனது. இன்றும் தங்க விலை குறைந்து உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1624 ரூபாய் சரிந்துள்ளது.

பப்ஜி விளையாட்டால் மலர்ந்த காதல் – மாணவி வீட்டை விட்டு ஓட்டம்!!

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) ஒரு கிராம் 65 ரூபாய் குறைந்து ரூ.4,755 க்கும், ஒரு சவரன் ரூ.520 குறைந்து ரூ.38,040 க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலையும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று ஒரு கிராம் ரூ.2.70 குறைந்து ரூ.60.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here