பப்ஜி விளையாட்டால் மலர்ந்த காதல் – மாணவி வீட்டை விட்டு ஓட்டம்!!

0
pubg love
pubg love

பப்ஜி விளையாட்டு தற்போது தடை செய்யப்பட்டு உள்ள நிலையில் தன்னுடன் பப்ஜி விளையாடிய இளைஞன் மீது கொண்ட காதலால் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி வீட்டை விட்டு ஓடி திருவாரூரில் தனது காதலனை திருமணம் செய்துள்ளார்.  இது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பப்ஜி காதல்:

பப்ஜி விளையாட்டிற்கு இளைஞர்கள் பலர் அடிமையாகி இருந்தனர். முழுநேரமும் இந்த பப்ஜி விளையாட்டை விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டி வந்தனர். இதனால் பொதுநலன் கருதி மற்றும் சீன தயாரிப்புகளுக்கு ஏற்பட்ட எதிர்ப்பால் பப்ஜி விளையாட்டிற்கு அரசாங்கம் தடை விதித்தது. இந்த தடைக்கு பின் சிலர் பப்ஜி விளையாட்டிற்காக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்தது. கண்டதும் காதல், பார்க்காமல் காதல் என்று தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் பப்ஜியில் காதல் மலர்ந்துள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

pubg

திருவட்டார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மரவியாபாரியான சசிகுமார். இவர் இளைய மகள் பபிஷா. 20 வயதான இவர் அருகில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பப்ஜி விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்த பபிஷா படிப்பை பாதியிலேயே மூட்டை கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த பபிஷா திடீரென காணாமல் மாயமாகியுள்ளார். இதனால் அவர்களின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர்.

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு கொரோனா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

pubg love
pubg love

இதற்கிடையில் பபிஷா பப்ஜி விளையாட்டில் அஜின் பிரின்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து மாலையும் கழுத்துமாக திருவட்டார் காவல் நிலையத்திற்க்கு வந்துள்ளார். மேலும் பபிஷா தான் பப்ஜி விளையாடும்போது வெற்றியை நோக்கி தன்னை பாதுகாப்பாக வழிநடத்தி சென்றவர் அஜின். எனவே தான் அவர் மீது காதல் மலர்ந்து அவரை திருமணம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

pubg love
pubg love

ஊரடங்கு காரணமாக அவரை பார்க்க முடியாமல் தவித்து வந்த பபிஷா தன்னை தேடி காரில் வந்த அஜின் உடன் சென்றுள்ளார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுவதாக கூறி தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இருவரும் மேஜர் என்பதால் பெற்றோர்களை அழைத்து சமரசம் செய்துள்ளனர் காவல் துறையினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here