ஆசிய கோப்பை: இறுதிப் போட்டியில் இருந்து விலகிய 5 முக்கிய பவுலர்கள்…, வெளியான அதிரடி அறிவிப்புகள்!!

0
ஆசிய கோப்பை: இறுதிப் போட்டியில் இருந்து விலகிய 5 முக்கிய பவுலர்கள்..., வெளியான அதிரடி அறிவிப்புகள்!!
ஆசிய கோப்பை: இறுதிப் போட்டியில் இருந்து விலகிய 5 முக்கிய பவுலர்கள்..., வெளியான அதிரடி அறிவிப்புகள்!!

ஆசிய கோப்பை தொடரின் 16 சீசனுக்கான இறுதிப் போட்டி செப்டம்பர் 17 (நாளை) நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப் போட்டியில், இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி மோத உள்ளது. ஆசிய கோப்பையை வெல்வதற்காக இந்த இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இலங்கை அணியின் முன்னணி பந்து வீச்சாளர் திடீரென விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கையின் மகேஷ் தீக்ஷனா தனது வலது தொடை தசையில் பலத்த காயம் அடைந்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவரது, காயத்தின் தன்மையை ஆராய்ந்த மருத்துவ குழு, சில நாட்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். இதனால், ஆசிய கோப்பைக்கான இறுதிப் போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இவருக்குத் தகுந்த மாற்று வீரராக சஹான் ஆராச்சிகே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணியை பொறுத்த வரையில், இந்த ஆசிய கோப்பையில் முன்னணி 5 பவுலர்கள் (ஹசரங்க, தீக்ஷனா, சமீரா, மதுஷங்க, லஹிரு குமார) இல்லாமல் இறுதிப் போட்டியை விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வருடம் கூட முடியல அதுக்குள்ள இத்தனை ரன்களா?? டாப் 3 இந்திய வீரர்களின் சாதனை பட்டியல் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here