எதிர்வரும் ஒருநாள் உலக கோப்பைக்காக சர்வதேச அணிகள் தயாராகும் விதமாக, இந்த வருடம் ஆசிய கோப்பை தொடரும் ஒருநாள் வடிவில் அரங்கேறுகிறது. ஆறு அணிகள் பங்கு பெற்று விளையாடப்பட்ட இந்த ஆசிய கோப்பை தொடர் தற்போது இறுதிப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. இதில், பங்களாதேஷ் அணிக்கு எதிராக தனது கடைசி சூப்பர் 4 சுற்றை விளையாடி இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இருப்பினும், இந்திய அணியில் சுப்மன் கில் மட்டும் சதம் (121) விளாசி அசத்தியிருந்தார். இதன் மூலம், இந்த வருடம் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார். அதாவது, இந்த வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 9 மாதங்களில் சுப்மன் கில் 48.71 சராசரியுடன் 1559 ரன்கள் எடுத்து அசத்தி உள்ளார். இவரை தொடர்ந்து, ரோஹித் சர்மா 1117 ரன்கள் (48.56 சராசரி), விராட் கோலி 1113 ரன்கள் (55.65 சராசரி) என அதிரடியாக விளையாடி உள்ளனர்.
கடைசி ஓவரில் தலைகீழாக மாறி ஆட்டம்…, இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த பங்களாதேஷ்!!